கேரளாவில் வெள்ளப் பெருக்கு!! 26 பேர் பலி!!


இந்தியாவில் தென்பகுதியில் அமைந்துள்ள கேரளா மாநிலப் பகுதியில் பெய்த கனமழை காரமாண அங்கு ஏற்றபட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 26 பேர் உயரிழந்துள்ளனர்

இறந்தவர்களில் ஐந்து குழந்தைகளும் அடங்குவர். பலர் காணாமல் போனதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

கேரள கோட்டயம் மாவட்டத்தில் பல வீடுகள் வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டதில் மக்கள் சிக்கியுள்ளனர். இதேபோன்று பேருந்து பயணிகள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் பயணிகள் காப்பாற்றப்பட்டனர்.

கோட்டயம் மற்றும் இடுக்கி மாநிலத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இரண்டு மாவட்டங்கள். பல நாட்களாக பெய்து வரும் கனமழையால் கொடிய நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. 

ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு, மாநிலம் முழுவதும் 184 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன

8,000 பேருக்கு உணவு, படுக்கை மற்றும் ஆடை வழங்கப்படுகிறது. வீடு மற்றும் பயிர்களை இழந்தவர்களுக்கு அரசு நிவாரண நிதியுதவியை அறிவித்துள்ளது.

2018 ஆம் ஆண்டில், கனமழை வெள்ளத்தில் சுமார் 400 பேர் இறந்தனர் என்பது நினைவூட்டத்தக்கது.

No comments