ரைஸ் குக்கருடன் நடந்த விசித்திரமான திருமணம்!!


இந்தோனேசியாவை சேர்ந்த இளைஞர் கொய்ருல் அனம். இவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், சில நாள்களுக்கு முன்பு  மணமகன் போல் உடையணிந்து ரைஸ் குக்கரை  மணமகள் போல அலங்கரித்து, அதை திருமணம் செய்து கொண்டதாக பகிர்ந்தார்.

மேலும் அவர், ரைஸ் குக்கர் வெள்ளையாகவும், அன்பாகவும் இருப்பதாகவும் நன்றாக சமைக்கும், சொல்வதை கேட்டு நடக்கும் நடக்கும் என்பதாலும் அதை திருமணம் செய்வதாக அந்த பதிவில் தெரிவித்து இருந்தார்.


இந்த நிலையில், 4 நாட்கள் கழித்து வெறும் அரிசி சாதத்தை மட்டுமே அந்த ரைஸ் குக்கர் சமைப்பதால் அதை விவாகரத்து செய்வதாக கூறினார். சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் ஆவதற்காக இந்த முழு நிகழ்வும் நடைபெற்று இருப்பதாக தெரிகிறது. 

ஏனெனில், கொய்ருல் அனம் என்ற அந்த இளைஞர், ஏற்கனவே பல விசித்திரமான நடவடிக்கைகள் மூலம் சமூக வலைத்தளங்களில் பிரபலமானவராக இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

No comments