ஈஸ்டர் தாக்குதல்!! வழக்கைக் கைவிடுமாறு நீதிவான் உத்தரவு!!


முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிரான வழக்கை கைவிடுமாறு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் சஞ்சய கமகே, இன்று புதன்கிழமை (27) கட்டளை பிறப்பித்தார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலைத் தடுக்கத் தவறியமை மற்றும் பொறுப்பிலிருந்து தவறி மனித படுகொலை இடம்பெற உடந்தையாக இருந்ததாகவே இருவர் மீதும் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இருவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்திருப்பதால், அவர்களுக்கு எதிராக நீதவான் நீமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கைவிடுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பதில் நீதவான், மேற்குறிப்பிட்ட உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

No comments