மிளகாய்த் தூள் வீசி நகைக்கடையில் கொள்ளளை!!


அம்பாறை, திருக்கோவில் விநாயகபுரம் பிரதான வீதியிலுள்ள நகைக்கடை ஒன்றில், பட்டப்பகலில் கொள்ளையிட்ட சந்தேகத்தில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இத்திருட்டுச் சம்பவம் தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவருவதாவது, 

நேற்று செவ்வாய்க்கிழமை (26) பிற்பகல் நகைக் கடைக்குள் நுழைந்த சந்தேகநபர், கடையில் இருந்த நபருக்கு மிளகாய்த் தூள் விசிறி நகைகளைக் கொள்ளையடிக்க முற்பட்டுள்ளார்.

இதன்போது, நகைக் கடையில் இருந்த நகைக்கடை உரிமையாளரின் மருமகனுக்கும் சந்தேகநபருக்கும் இடையில் சண்டையிடும் காட்சிகள், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து கடை உரிமையாளர் மற்றும் பொதுமக்கள் இணைந்து குறித்த நபரை மடக்கிப் பிடித்து, காவல்துறையினரிடம் ஒப்படைத்ததாக, கடை உரிமையாளர் தெரிவித்தார்.

No comments