கோட்டாவின் வருகை!! பெல்ஜியத்திலும் போராட்டம்!!

தமிழினப் படுகொலையினை மேற்கொண்ட கோத்தபாய ராயபக்சேவின் ஸ்கொட்லாந்து நாட்டின் வருகையினை எதிர்த்தும் , தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக

சுயாதீன விசாரணை வேண்டி பெல்சியத்தில் கவனயீர்ப்பு போராட்டம்.

தமிழினப் படுகொலையினை  மேற்கொண்ட முக்கியமான இனப்படுகொலையாளிகளில் ஒருவனான சிறிலங்கா சனாதிபதி கோத்தபாய ராயபக்சே எதிர்வரும் 01.11.2021 , Scotland நாட்டில் நடைபெற இருக்கும் உலக சுகாதார சுற்றுச்சூழல் மாநாட்டிற்கு வருகைதர இருக்கின்றார். திட்டமிட்டு சிங்களப்பேரினவாத அரசினால் நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு கோத்தபாய ராசபக்சே மற்றும் அவர் சார்ந்த சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துல சுயாதீன விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் மற்றும் தமிழர்களுக்கு தமிழீழமே நிரந்தரமான தீர்வு என்பதனையும் வலியுறுத்தியபடி பெல்சியத்தின் தலைநகர் புருசல்சில் அமைந்திருக்கும் பிரித்தானிய தூதரகத்தின் முன்றலில் தமிழர் ஒருங்கிணைப்பு குழு- பெல்சியக் கட்டமைப்பினால் பெரும் கவனயீர்பு போராட்டம் எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெற இருக்கின்றது. அனைத்து பெல்சியம் வாழ் மக்களையும் உங்கள் வரலாற்று கடமையாற்ற உரிமையோடு அழைக்கின்றோம். 


No comments