பட்டினியால் வாடும் குடும்பம்!! பெண் குழுந்தையை 500 டொலர்களுக்கு விற்றது!


ஆப்கானிஸ்தானில் பட்டினியால் வாடும் குடும்பத்தினரால் பெண் குழந்தை ஒன்று 500 டொலர்களுக்கு விற்கப்பட்டுள்ளது.

தற்போது தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றி ஆட்சி நடத்திவரும் நிலையில் ஆப்கானிஸ்தான் உலகின் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்கிறது.

தலிபான் ஆட்சியை எவ்வாறு கையாள்வது என்று உலகம் விவாதித்து வரும் நிலையில், நாட்டின் பலவீனமான பொருளாதாரத்திற்கு முட்டுக்கட்டை போடும் சர்வதேச நிதிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

அவசர உதவி விரைவில் நாட்டிற்கு சென்றடையாவிட்டால் மில்லியன் கணக்கான மக்கள் இறக்க நேரிடும் என்று ஐக்கிய நாடுகள் சபை கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளமை நினைவூட்டத்தக்கது.

No comments