கடத்தினால் ஜனாதிபதியிடம் புகாரிடலாம்?

கடத்தினால் ஜனாதிபதியிடம் புகாரிடலாம்?“பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் காரணமின்றித் தவறாக யாராவது கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தால் அவர்கள் தொடர்பில் ஆராய்ந்து நீதி வழங்க ஜனாதிபதி குழுவொன்றை நியமித்துள்ளார். அவ்வாறு யாராவது தவறாக கைதாகியிருந்தால் இந்தக் குழுவில் முறையிடுவதன் மூலம் இந்தக் குழு அது தொடர்பில் ஆராய்ந்து ஜனாதிபதிக்கு பரிந்துரை முன்வைத்த பின்னர் ஜனாதிபதி அவ்வாறானவர்கள் தொடர்பில் முடிவெடுப்பார் என இலங்கையின் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கருத்துச் சுதந்திரத்திற்கு தடை போட மாட்டோம். ஆனால் சமூக வலைத்தளங்களின் மூலம் குரோதத்தை வளர்க்க இடமளிக்க முடியாது. பொய்யான விடயங்களை முன்வைத்தால் வழக்குத்தொடரக் கூடிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். பெண்களின் உரிமை தொடர்பில் விடயங்கள் உள்ளடக்க வேண்டும்

பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிகள் கருத்துக்களை முன்வைத்தார்கள். இது தொடர்பில் பரவலாக ஆராயப்படுகிறது.

எனது கோரிக்கைக்கு அமைவாக 41 வருடங்களின் பின்னர் ஜனாதிபதி குழுவொன்றை நியமித்துள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் ஆலோசனைக் குழுவொன்றை நியமித்துள்ளார். யாராவது தவறாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தால் அவர்கள் தொடர்பில் இந்தக் குழுவுக்கு தெரிவிக்கலாம்.

இந்தக் குழு ஆராய்ந்து ஜனாதிபதிக்கு பரிந்துரை முன்வைக்கும். 46 பேர் தொடர்பில் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி ஆராய்ந்து முடிவெடுப்பார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் மீளாய்வு செய்ய ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் அமைச்சரவை உபகுழுவொன்றையும் ஜனாதிபதி நியமித்துள்ளார்.

தேசிய பாதுகாப்புக்கு குந்தகமற்ற நாட்டுக்கு உகந்த சட்டமொன்றை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


No comments