கிளிநொச்சிக்கு பிணவறையாக மாறிய 20 அடிக் கொள்கலன்!!


கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் நிலவிய குளிரூட்டல் வசதியைக் கொண்ட பிணவறை பற்றாக்குறையைடுத்து,  20 அடிநீளமான இரும்பு கொள்கலன் ஒன்று கிளிநொச்சியில் இராணுவத்தினரால் பிணவறையாக மாற்றியமைக்கப்பட்டு வைத்தியசாலை நிர்வாகத்திடம்  கையளிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்களின் உடலங்களைக் குளிரூட்டிப் பேணுவதற்குரிய  கொள்கலனை  மாவட்டச் செயலாளர் ஏற்படுத்தி கொடுத்திருந்த நிலையில் அதனை பொறுப்பேற்று முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சிசிர பிலபிட்டிய அவர்களின் ஏற்பாட்டில்  கிளிநொச்சி முன்னரங்கு பாதுகாப்பு பராமரிப்பு பகுதி  படைச் சிப்பாய்களால் பிணவறையாக மாற்றியமைக்கப்பட்டு வைத்தியசாலை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

No comments