பல்கலைக்கழக மாணவர்களிற்கு ஊசி!இலங்கையில் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தங்களுக்கு அருகாமையில் உள்ள பல்கலைக்கழகத்தில் கொரோனா தடுப்பூசிகளைப் பெறலாம் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் சுகாதார அமைச்சினால் அனுப்பப்பட்ட குழுக்களால் தடுப்பூசி வழங்கப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.


பல்கலைக்கழக மாணவர்களின் கல்வியை இயல்பாக்குவதை துரிதப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக இது செயல்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments