கிளியில் மீண்டும் கொரோனா மரணம்!

 கிளிநொச்சியில் உயிரிழந்த மூதாட்டிகள் இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக் கழக ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மூதாட்டிகளுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டிருப்பதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் இருந்து பெறப்பட்டிருந்த உயிரிழந்த மூதாட்டிகளின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் அவர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த நிலையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 84 வயதுடைய நாகேந்திரம் – தர்மலக்சுமி மற்றும் 75 வயதுடைய சிவநேசன் – கண்மணி என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments