சுமந்திரன் ஆடுவது தனிக்காவடி!எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் விடுத்துள்ள மீனவ சட்டங்களை அமுல்படுத்த கோரும் போராட்டம் அவரது அரசியல் நலனுக்கானதென யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சம்மேளனத்தை சேர்ந்த நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் இதுவரை மீனவர்களது பிரச்சினைகள் பற்றி தம்முடன் ஏதும் எம்.ஏ.சுமந்திரன் பேசியிருக்கவில்லையென தெரிவித்த வர்ணகுலசிங்கம் தமது ஆதரவை கோரியிருக்கவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் 117 மீனவ சங்கங்கள்  மற்றும் சமாசங்கள்,சம்மேளனமென பலமான கட்டமைப்புக்கள் பல இருக்கின்றன.

ஆனாலும் எம்.ஏ.சுமந்திரன் இத்தகைய தரப்புக்கள் எவற்றினதும் ஆதரவை பெறாது எவ்வாறு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்திருந்தார் என்பதும் தெரியவில்லையெனவும் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.


No comments