ஆஸ்திரேலியாவில் பயங்கரவாதத் தாக்குதல்: துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி!


ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரை அருகே நடந்த துப்பாக்கிச் சூடு, 'பயங்கரவாத சம்பவம்' என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் ஒரு குற்றவாளி உட்பட குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதாக நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் கிறிஸ் மின்ஸ் தெரிவித்தார்.

இரண்டு காவல்துறை அதிகாரிகள் உட்பட 29 பேர் காயமடைந்தனர், அவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

மற்றொரு குற்றவாளியின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளது.

இந்த சம்பவத்தில் மூன்றாவது குற்றவாளி ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை ஆணையர் மால் லான்யோன் தெரிவித்தார்.

No comments