சீனா கசக்கிறதாம்!கொழும்பு துறைமுகத்திற்கு சீன நிறுனத்தின் கரிம உரத்துடன் வருவதாக கூறப்படும்  கப்பல் பற்றி எதுவும் தெரியாது என்று சீன தூதரகம் கூறியுள்ளது.

 உரம் வாங்குவது ஒரு வணிக முயற்சி என்றும் தூதரகத்திற்கு அதில் எந்த தொடர்பும் இல்லை என்றும் தூதரகம் கூறியுள்ளது.

 இலங்கைக்கு வரும் 20,000 மெற்றிக் தொன் உரங்களை ஏற்றி வரும் கப்பலில் தீங்கு விளைவிக்கும் எர்வீனியா பாக்டீரியா  இருப்பதாகத் தெரியவந்ததையடுத்து, அது தொடர்பில்  வினவியபோதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.

ஆனால், அந்த உரங்களில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து சீன தூதரகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

 தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா" பற்றிய குற்றச்சாட்டுகள் "ஏற்றுக்கொள்ள முடியாதவை" என்றும் அவை ஆய்வக அறிக்கைகள் மூலம் அனுப்பப்பட்டதாகவும் தூதரகம் ஒரு அறிக்கையில் அண்மையில் தெரிவித்திருந்தது

உர கையிருப்பு தலைகீழாக மாறுவது இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை பாதிக்கும் என தூதரகம் தெரிவித்துள்ளது.

No comments