யாழ்ப்பாணத்திற்கும் வருகிறது திரவ உரம்!இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட உரம் தொடர்பில் விவசாயிகளிடையே அவநம்பிக்கையீனம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே யாழ்.மாவட்ட நெற்செய்கையாளர்களுக்கு வழங்குவதற்காக இந்தியாவின் நனோ நைட்ரஜன் திரவ உரம் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்.மாவட்டத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாழ்.மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் 11 ஆயிரத்து 260 கெக்ரேயர் நெற் செய்கைக்காக சுமார் 33 ஆயிரம் லீற்றர் திரவ உரம் தேவைப்படுகிறது.

இந்நிலையில் முதற்கட்டமாக ஒரு பகுதி திரவ உரத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.

No comments