முதலில் காலக்கெடு:பிறகே வரிச்சலுகை!இலங்கையில் அமுலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் குறித்து இலங்கையின் காலக்கெடுவை ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது இந்த விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது பிடிஏ விரைவில் திருத்தப்படும் என்று ஜனாதிபதி ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உறுதியளித்தார்.

மேலும் உலகில் மனித உரிமைகள் தொடர்பான உடன்படிக்கைகளுக்கு நாடு கட்டுப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இலங்கைக்கு  GSP பிளஸ் வர்த்தகச் சலுகையை பரிசீலனை செய்ய உள்ளனர்.

No comments