சுமா அழைப்பில் வந்தவர்களை திருப்பியனுப்பிய சீருடை!ஏம்.ஏ.சுமந்திரனின் அழைப்பினையடுத்து விவசாயிகள் எதிர்கொள்ளும் உரப் பிரச்சினை மற்றும் கிருமிநாசினி இல்லாமல் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட வந்தவர்கள் படையினரது மிரட்டலால் இடையில் கைவிட்டு ஓடியுள்ளனர்.எம்.ஏ.சுமந்திரனின் ஏற்பாட்டில் வடமாகாணத்தின் பல்வேறு பகுதிகளில், நேற்று (18) காலை, விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், உரும்பிராய் கமநல சேவை நிலையத்துக்கு முன்பாக விவசாயிகள் மேற்கொள்ள இருந்த போராட்டத்தை, பொலிசார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நிறுத்தியுள்ளனர்.

அத்துடன், போராட்டத்துக்கு வந்திருந்தவர்களை இராணுவத்தினரும் கோப்பாய் பொலிஸாரும் அச்சுறுத்தியுள்ளனர். அச்சுறுத்தலுக்கு பயந்து விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு சென்றுள்ளனர்.

சீருடை தரித்தவர்களின் அச்சுறுத்தல் காரணமாக, போராட்டத்தை மேற்கொள்ள முடியாமல் போனதாக, போராட்டத்துக்கு வந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே அச்சுறுத்தல் தொடர்பாக ஏற்பாட்டாளரான எம்.ஏ.சுமந்திரனிற்கு அறிவிக்கப்பட்ட போதும் அவர் எட்டிக்கூட பார்த்திருக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.


No comments