ஆண் ஒருவர் அடித்துக்கொலை!!


மட்டக்களப்பு கரடியனாறு முள்ளிச்சேனை தோட்டத்தில் ஆண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சந்தேகத்தில் உயிரிழந்தவரின் நண்பன் ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்தவர் மரப்பாலம் முள்ளிச்சேனையைச் சேர்ந்த 56 வயதுடைய கிருஷ்ணபிள்ளை நேசராசா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரும் அவருடைய நண்பனும்  நேற்று திங்கட்கிழமை இரவு வீட்டிற்கு அருகாமையிலுள்ள தோட்டம் ஒன்றில் உள்ள வாடியில் மதுபானத்துடன் சென்று மது அருந்தியுள்ளனர்.

சம்பவம் குறித்து மதுபானம் அருந்திய நண்பர் தெரிவிக்கையில்:-

இந்நிலையில் உந்துருளியில் வந்த இருவர் நண்பனை தாக்கியதை அடுத்து அங்கிருந்து தப்பிச் சென்று அருகிலிருந்து காட்டுக்குள் ஒளிந்ததாகவும் யானை பயத்தினால் அங்கிருந்து இன்று காலையில் வெளியேறி நண்பனின் வீட்டிற்கு சென்று நண்பனை அடித்து கொலை செய்யப்பட்டுள்ளான் என்பதைத் தெரிவித்து அவர்களுடன் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை பார்த்ததாகவும் கைது செய்யப்பட்டவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

No comments