உரம் தொடர்பில் கோத்தாவுடன் பேச முயற்சி!

ராஜபக்ச தரப்பினை விட்டிற்கு அனுப்பி வைப்பதாக உரப்பிரச்சினை மாறியுள்ள நிலையில்  உர நெருக்கடி தொடர்பில் விடயங்களை தௌிவுபடுத்தி கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு, பல்கலைக்கழக விவசாய பீடங்களின் பேராசிரியர்கள் சிலர், இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை விவசாய அமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் உதித் கே. ஜயசிங்க ஊடாக இலங்கை ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள குறித்த கடிதத்தில் 141 கலாநிதிகளும் பேராசிரியர்களும் கையொப்பமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை ஜனாதிபதியிடம் கடிதத்தை சமர்ப்பித்ததன் பின்னர் கலந்துரையாடலுக்கான நேரம் ஒதுக்கப்படும் என விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்

No comments