இலங்கை:சீனிக்கு தடையில்லையாம்!இலங்கைக்கு சீனி இறக்குமதி செய்ய மீண்டும் இலங்கை அரசு அனுமதியளிக்கவுள்ளது. வெள்ளை சீனியை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கும் வகையில், வர்த்தமானி அறிவித்தல் இன்று(01) வெளியாகியுள்ளது.

வெள்ளை சீனியை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் தமயந்தி கருணாரத்ன நேற்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதேவேளை, நாட்டில் டொலர் கையிருப்பு தொடர்பான நெருக்கடி நிலவிய சூழலில்  சுமார் 3 மாதங்களுக்கு வெள்ளை சீனி இறக்குமதி இடைநிறுத்தப்பட்டிருந்தது.

No comments