கஞ்சா கடத்தலாம்:மஞ்சளிற்கு தடை!இலங்கை காவல்துறை கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை பிடிக்கிறதோ இல்லையோ தற்போது துரத்தி துரத்தி மஞ்சளை பிடித்துவருகின்றது.

வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் பற்றைக்குள் 217 கிலோ கிராம் மஞ்சளை பதுக்கிவைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதே போன்று அனலைதீவில் வீடொன்றில் 20 மஞ்சள் மூடைகள் பதுக்கிவைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.அதனை பதுக்கி வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கைது நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு முன்னெடுக்கப்பட்டது .நாவற்குழி மற்றும் அனலைதீவைச் ஆகிய இடங்களைச் இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலிருந்து கடத்திவரப்பட்ட மஞ்சள், தீருவிலிருந்து வேறு இடத்துக்கு மாற்றத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.அவற்றை கடத்தி வந்தனர் என்ற குற்றச்சாட்டில் 26,28 மற்றும் 46 வயதுகளையுடைய மூவர் கைது செய்யப்பட்டனர்.

நாட்டில் மஞ்சள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை நாட்டுக்குள் சட்டத்துக்கு முரணாகக் கொண்டுவருவதை கடத்தல் என சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.


No comments