இந்தியாவின் நீர்மூழ்கிக் கப்பல் ஊடுருவல் தடுக்கப்பட்டது - பாகிஸ்தான்


இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று பாகிஸ்தான் எல்லைக்கு ஊடுருவ முற்பட்டபோது அது கண்டறகயப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டதாக பாகிஸ்த்தான் கடற்படை அறிவித்துள்ளது.

இச்சம்பவம் குறித்து செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் இராணுவம் வெளியிட்ட அறிக்கையில்:-

இந்திய நீர்மூழ்கிக் கப்பல் மூலமான ஊடுருவ முயற்சி சனிக்கிழமை இரவு நடந்தது.

நிலவும் பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு பாகிஸ்தானின் கடல் எல்லைகளைப் பாதுகாக்க பாகிஸ்தான் கடற்படையால் கடுமையான கண்காணிப்பு வைக்கப்பட்டுள்ளது.

நீர்மூழ்கிக் கப்பலை பாகிஸ்தான் கடற்படை நீண்ட தூர கடல் ரோந்து விமானத்தால் முன்கூட்டியே கண்டறியப்பட்டு கண்காணிக்கப்பட்டது என்று அது கூறியது.

இந்த குற்றச்சாட்டுக்கு இந்திய அரசிடமிருந்து உடனடி பதில் ககடைக்கவில்லை.


No comments