வல்வெட்டித்துறை மீனவர்களிற்கு சிறை!தம்மால் கொல்லப்பட்ட தமிழக மீனவனின் உடலத்தை இந்திய அன்பளிப்பு கடற்படை கப்பலில் எடுத்து சென்று கையளித்து செய்தி சொல்லியுள்ளது இலங்கை அரசு.

அண்மையில் இலங்கை கடற்படையால் மோதப்பட்டு கொல்லப்பட்ட தமிழக தமிழ் மீனவனின் உடலத்தையே இந்திய அரசு தமக்கு அன்பளிப்பாக வழங்கிய கடற்படை கப்பலில் எடுத்து சென்று கையளித்துள்ளது இலங்கை கடற்படை.

இதனிடையே இந்திய மீனவர்களிற்கு எதிராக நடவடிக்கைகள் முடக்கிவிடப்பட்டுள்ள நிலையில் பழிவாங்கும் போக்கில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு இந்திய கடற்படையால் கைது செய்யபட்ட வல்வெட்டித்துறை மீனவர்கள் புழல்  சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியை சேர்ந்த நிமலதாஸ் வீரசிங்கம், மற்றும் கஜிபன் தர்மராஜ் ஆகியோரை வரும்  நவம்பர் முதலாம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில் அவர்கள் தமிழகத்தின் புழல்  சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே இலங்கை கடற்படை தாக்குதலில் உயிரிழந்த இந்திய மீனவரது சடலம் இன்று அடக்கம் செய்யப்பட்டுள்ளது.No comments