நோர்வேயில் வில் அம்பு கொண்டு தாக்குதல்! 5பேர் பலி!


நோர்வேயில் ஒருவர் வில் மற்றும் அம்பு எய்து தாக்கியதில் 5 பேர் கொல்லப்பட்டனர். மேலும்  இரண்டு பேர் காயமடைந்தனர்.

தலைநகர் ஒஸ்லோவின் தென்மேற்கில் உள்ள காங்ஸ்பெர்க் நகரில் உள்ளூர் நேரப்படி 18:13 மணியளவில் (16:13 GMT) தாக்குதல் நடத்தப்படுவதாக காவல்துறை தகவல் கிடைத்தது.

கொல்லப்பட்டவர்களில் நான்கு பெண்களும் ஒரு ஆண் எனவும் தெரியவந்துள்ளது. . அந்த நேரத்தில் கடையில் இருந்த ஒரு கடமை இல்லாத காவலதுறை அதிகாரி காயமடைந்தார்.

இந்த தாக்குதலை மேற்கொண்டதாக சந்தேகத்தின் பேரில் 37 வயதான டேனிஷ் நபர்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .கைது செய்யப்படுவதற்கு முன்பு தாக்குதல் நடத்தியவருக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட தாக்குதலாளி இஸ்லாமியராக மாறியுள்ளார் என காவல்துறை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது

பிரதமர் எர்னா சோல்பெர்க் இந்த சம்பவம் பற்றிய தகவல்கள் திகிலூட்டக்கூடியவை என்று கூறினார்.

 பலர் பயப்படுகிறார்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். இப்போது எல்லாம் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை வலியுறுத்த வேண்டியது அவசியம் என்று அவர் செய்தியாளர் கூறினார்.

No comments