மே18-நினைவேந்தல்:150 நாளாகியும் பிணையில்லை!மட்டக்களப்பு,கிரான் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் கல்குடா காவல்துறையால் கடந்த மே18ம் ஆம் திகதி கைது செய்யப்பட்ட தமிழ் உணர்வாளர்கள் 150 நாட்கள் தாண்டியும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

நினைவேந்தலை முன்னெடுத்திருந்ததாக இரு பெண்கள் உட்பட்ட 10பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்கள் தொடர்பான வழக்கு இன்று வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.   வாழைச்சேனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.பசீல் முன்னிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

எனினும் இன்றைய தினம் கைதான பொதுமக்களை நீதிமன்றத்துக்கு இலங்கை சிறைச்சாலை அதிகாரிகள் அழைத்து வந்திருக்கவில்லை.

இதனையடுத்து வழக்கு விசாரணையினை ஒத்தி வைத்த நீதிபதி இணைய வழியூடாக எதிர்வரும் 25ம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


No comments