புத்தபகவானை தரிசித்த இந்திய வெளிவிவகாரச் செயலாளர்!!

இலங்கையின் அரசியலைப் பற்றி பேசுவதற்கு நான் ஸ்ரீ தலதா மாளிகைக்கு வரவில்லை என தெரிவித்துள்ள இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ஸ்ரீஹர்ஸ் வர்தன் ஷங்ரிலா, தான் புத்தபகவானை தரிசிப்பதற்காகவே கண்டிக்கு விஜயம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இன்று (3) கண்டி ஸ்ரீ தலாதா மாளிகைக்கு விஜயம் செய்த இவரிடம், ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கைக்கான முதல் விஜயத்தை மேற்கொண்டுள்ள தான், சிறந்த ஆரம்பமாக தனது பயணத்தை தலதா மாளிகையை வழிபட்ட பின்னர் ஆரம்பிக்க கிடைத்துள்ளமை தொடர்பில் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்துள்ளார்.


No comments