சுமந்திரன் பற்றி அக்கறையில்லை!

 


தமிழரசுக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் அவர்களின் ஆதரவாளர்களும் இணைந்து முல்லைத் தீவில் இருந்து பருத்திதுறை வரை மேற்கொண்ட கடற் பயணம் தொடர்பாக அலட்டிக் கொள்ளவில்லை என இலங்கையின் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அத்துடன் கடற்பயணம் தோல்வியில் முடிவடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இழுவை வலை தடைச் சட்டத்தினை உருவாக்கியதாக தெரிவிக்கின்ற எம்.ஏ.சுமந்திரன் போன்றவர்கள் சட்டத்தினை நல்லாட்சி காலத்தில் அமுல்படுத்தாமல் இருந்தது எதற்காக எனவும்  டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

2017 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் இழுவை வலைச் சட்டம் உருவாக்கப்பட்ட பின்னர் சுமார் 100 இற்கும் மேற்பட்ட இந்திய மீன்பிடிப் படகுகள் கைப்பற்றப்பட்ட போதிலும், அவைக்கு எதிராக நல்லாட்சி காலத்தில் இழுவை வலைத் தடைச் சட்டம் பயன்படுத்தப்படவில்லை எனவும் டக்ளஸ் தேவானந்தா  குற்றஞ்சாட்டியிருந்தார்.

No comments