"Facebook" பெயர் மாற்றப்படுகிறது!

 


உலகின் முன்னணி சமூக ஊடகமான Facebook அதன் பெயரை மாற்றத் திட்டமிடுவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

தொழில்நுட்பம் தொடர்பாகச் செய்திகளை வெளியிடும் The Verge அதுகுறித்துத் தகவல் வெளியிட்டுள்ளது.

புதிய பெயர் குறித்து நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸக்கர்பர்க் (Mark Zuckerberg) வரும் 28 ஆம் தேதி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெயர் மாற்றம் குறித்து Facebook இதுவரை எந்தத் தகவலையும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.

Facebook நிறுவனத்திற்குக்கீழ் Instagram, WhatsApp, Oculus போன்ற உலகின் முன்னணிச் செயலிகள் செயல்படுகின்றன

No comments