ஓய்ந்த பாடாக இல்லை!

 


யாழ்.சிறைச்சாலையில் 39 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களில் 22 வயதான இளம் பெண்ணும் அடங்கியிருக்கின்றார்.

இன்னொருபுறம் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் அவற்றை மீறி யாழ்.திருநெல்வேலி மற்றும் ஆனைக்கோட்டை பகுதிகளில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்திய 35 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்னர்.

திருநெல்வேலிப் பகுதியில் உள்ள பிரபல விடுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 20 பேரும்இ ஓட்டுமடம் பகுதியில் உள்ள வீடொன்றில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 15 பேரும் அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


No comments