கைதிகள் உளரீதியாக பாதிப்பு!அனுராதபுரம் சிறைச்சாலையில் அரங்கேற்றிய அச்சுறுத்தல் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ் அரசியல் கைதிகள் மிகவும் உளரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. இவ்வாறான சம்பவத்தில் ஈடுபட்ட அமைச்சர் பதவி விலகுவது மட்டுமல்லாமல் உரிய விசாரணைகளை மேற்கொண்டு அவர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளை இன்றைய தினம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

அரசியல் கைதிகளுடைய வழக்குகள் இழுபறிகளின்றி விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் .அத்துடன் விசாரணைக் காலம் வரை அவர்கள் தமது சொந்த பிரதேசங்களுக்கு அருகாமையிலுள்ள சிறைச்சாலைகளிற்கு  மாற்றப்பட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  


No comments