மீண்டும் பங்காளிகளுள் முட்டுப்பாடு!



இலங்கை மின்சாரசபையின் கெரவலப்பிட்டியவில் ஒரு பகுதியை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியமை தொடர்பில்  அரசாங்கத்தின் பங்காளிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

அரசினது பங்காளிகளான  பத்து கட்சிகளும்  கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன் கோத்தாவின் வருகைக்காக காத்துள்ளனர். 


அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசு தேவ நாணயக்கார மற்றும் திஸ்ஸ விதாரண உள்ளிட்டோர் தலைமையிலான பங்காளிகளே, கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் 


கெரவலப்பிட்டிய யுகதானவி மின்நிலையத்தில் 40 சதவீதத்தை அமெரிக்க நிறுவனத்துக்கு மாற்றும் தீர்மானத்துக்கே அந்த 10 பங்காளிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

நள்ளிரவு பன்னிரண்டு மணியளவில் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னரே கோத்தபாய அமெரிக்க பயணித்ததாக தெரியவருகின்றது. 



No comments