ரஷ்ய பல்கலைக்கழகத்தில் துப்பாக்சிச் சூடு! 6 மாணவர்கள் பலி!!


ரஷ்யாவில் பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 28 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று திங்கட்கிழமை காலை ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவிலிருந்து கிழக்கே 1,300 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள பெர்ம் நகரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் துப்பாக்கியால் மாணவர்கள் நோக்கி சுட்டத்தில் இந்த அனர்த்தம் ஏற்பட்டது.


தாக்குதல் நடத்திய சிறிது நேரத்தில் சந்தேக நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். தாக்குதல் நடத்தியவர் பல்கலைக்கழக மாணவர் என அடையாளம் காணப்பட்டதாக ரஷ்யாவின் விசாரணையை நடத்தும் குழு தெரிவித்துள்ளது. 

தாக்குதல் சம்பவத்தின்போது மாணவர்கள் சிதறி ஓடினர். சிலர் முதலாம் மாடியிலிருந்து சாளரங்கள் ஊடக நிலத்தில் குதித்து தப்பியோடினர். சில மாணவர்கள் தங்கள் அறையில் இருந்த நாற்காலிகளை தடுப்பாகப் பயன்படுத்தினர்.


குறித்த பல்கலைக்கழகத்தில் 12,000 மாணவர்கள் கல்வி கற்று வரும் நிலையில் சம்பவ தினமா இன்று 3,000 பேர் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்துள்ளனர்.


அதிபர் விளாடிமிர் புடின் கூறுகையில் இந்த தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு மட்டுமல்ல, முழு நாட்டிற்கும் பெரும் இழப்பு என்று கூறினார்.


No comments