கடந்த ஒரு மாதத்தில் வவுனியாவில் 50 பேர் பலி! 3328 பேருக்குத் தொற்று


வவுனியா மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் 3328 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 50 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்று வீதம் நாளாந்தம் அதிகரித்து செல்கின்றது.

குறிப்பாக ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியில் இருந்து 31 ஆம் திகதி வரை கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் 3328 பேர் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன், 50 பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளனர். 

தற்போது வவுனியாவில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் சடங்குகளிற்கோ, நிகழ்வுகளுக்கோ தேவையற்ற விதத்தில் வீட்டில் இருந்து வெளியில் வருவதனை இயன்றளவு தவிர்க்கும் போது நோய் பரம்பலை கட்டுப்படுத்த முடியும். இதற்கு அனைவரும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் சுகாதார பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.


No comments