உந்துருளிகள் நேரே மோதின!! ஒருவர் பலி!!


புளியங்குளம் காவல் பிரிவில் கண்டி - யாழ்ப்பாணம் ஏ 9 வீதியில் 201 கிலோ மீற்றர் தூணுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தை நோக்கி சென்று கொண்டிருந்த உந்துருளி அதே திசையில் பயணித்துக்கொண்டிருந்த பிரிதொரு உந்துருளியுடன் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த நிலையில் இரு உந்துருளிகளில் பயணித்த இருவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது , அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 49 வயதுடைய முள்ளியவெளி பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். புளியங்குளம் காவல்துறையினர் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments