மட்டக்களப்பில் கசிப்புக் காய்ச்சிய ஏழுவர் கைது!!


மட்டக்களப்பு ஏறாவூர் காவல்நிலைய பிரிவுக்குட்பட்ட களுவன்கேணி பகுதியில் பாரியளவில் நடத்திவரப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையமொன்று, மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறையினரால் இன்று ஞாயிற்றுக்கிழமை (19) அதிகாலை முற்றுகையிடப்பட்டது.

அங்கிருந்து 320,000 மில்லிலீற்றர் கோடா மற்றும் 56,000 மில்லிலீற்றர் கசிப்பு என்பன கைப்பற்றப்பட்டதுடன், மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோத போதைப்பொருள் பாவனையைக் கண்டறியும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவினால் தொடர்ச்சியான சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதேவேளை, காத்தான்குடி காவல்நிலையப் பிரிவில் 7,000 மில்லிலீற்றர் கசிப்பு மற்றும் போதைப்பொருள்களுடன் எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

No comments