ஜநாவும் புழுத்துப்போன வாய்ச்சவடால்களும்!

ஜநா அறிக்கை பற்றி கூட்டமைப்பு முதல் முன்னணி வரையாக திருட்டு முழியுடன் பம்ம அவ்வறிக்கை எவ்வாறு சிங்கள தேசத்தை

கொண்டாடுகின்றதென்பதை அம்பலப்படுத்தியுள்ளார் முன்னணி அரசியல் ஆய்வாளர் நிக்சன்.

அறிக்கை சொல்வதென்ன? 

ஜெனீவா மனித உரிமைச் சபை ஆணையாளரின் வாய்மூல அறிக்கை தற்போதைய கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தையே பாராட்டியுள்ளது. அத்துடன் புதிய வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எஸ்.பீரிஸ் மீது நம்பிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. 

ஆனால் சில தமிழ் செய்தி இணையத் தளங்கள் அறிக்கையின் ஆங்கில மொழி ஆக்கத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல், வெறுமனே மேலோட்டாமான விளக்கத்தைக் வைத்துக் கொண்டு, அரசாங்கத்தின் மீது ஆணையாளர் காரசாரமான குற்றச்சாட்டென பரபரப்பாகச் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

ஆனால், இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைபையும் (Unitary State) உள்ளக நீதி விசாரணைப் பொறி முறையையும் ஆணையாளர் நம்புகிறார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்த புதிய விசாரணைக் குழுவின் அறிக்கையையும் ஆணையாளர் எதிர்ப்பார்க்கிறார்.

அரசியல் தீர்வின் அவசியம் பற்றிக் கூறாமல் இலங்கையின் சமீபகால மனித உரிமை மீறல்கள், ஆசிரியர் போராட்ட அடக்குமுறைகள் பற்றியே ஆணையாளர் கவலைப்படுகிறார். (இந்தப் பிரச்சினைகள் பேசப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை) 

ஆனால்  ஜெனீவாத் தீர்மானத்தின் உண்மை நோக்கம் திசை திருப்பப்பட்டு, ஒட்டுமொத்த இலங்கை மக்களின் அடிப்படை உரிமை மற்றும் மனித உரிமைப் பிரச்சினையாகவே சித்தரிக்கப்பட்டுள்ளன. 

அத்துடன் கடந்த யூன் மாதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபாக்ச வழங்கிய உறுதிமொழியை ஆணையாளர் அவதானக் குறிப்பாக எடுத்திருக்கிறார். அத்துடன் அந்த உறுதிமொழியின் நிறைவேற்றத்தைத் தான் எதிர்ப்பார்ப்பதாகவும் சொற்களால் விபரிக்கிறார். 

அதாவது ஜனாதிபதி அர்ப்பணிப்புடன்  செயற்பாடுகிறாரென ஆணையாளர்  சொல்கிறார். 

46/1 தீர்மானம் நிறைவேற்ற ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் ஆணையாளர் ஆரவாரமாகச் சொல்கிறார். 

பாதிக்கப்பட்ட மக்களுக்கே தெரியாமலும் பெயர் பலகைகூட நாட்டப்படாமலும், கிளிச்சியில் அவசர அவசரமாகவும், இரகசியமாகவும் திறக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறியும் அலுவலகம் பற்றி ஆணையாளர் பாராட்டுகிறார், நம்புகிறார்.

ஆகவே இந்த வாய்மூல அறிக்கையின் அர்த்தமென்ன? 

இலங்கை குறித்த தீர்மானத்தின் மீளாய்வு அமர்வு என்றுகூட இதனைச் சொல்ல முடியாது.  

ஆனால் ஒன்று- இலங்கை அரசு என்ற கட்டமைப்பும், அதன் சிங்கள இராஜதந்திரிகளும் மிகத் தெளிவாகச் சிந்தித்து இயங்குகிறார்கள் என்பதையே ஆணையாளரின் இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது. 

ஆனால் பேராசிரியர் பீரிஸ், மறைந்த மங்கள சமவீர மற்றும் ரணில் விக்கிரமசிங்க போன்று சிறந்த தலைவர்களாகவும் இராஜதந்திரிகளாகவும் செயற்படக் கூடியவர்கள் தமிழர்கள் மத்தியில் இல்லை----

அதாவது தமிழரசுக் கட்சியைத் தங்கள் பக்கம் எடுத்துத் தமது ஒற்றையாட்சிக் கட்டமைப்பை சர்வதேசத்தில் நியாயப்படுத்துவது போன்ற புத்திசாலித்தனம் ஈழத்தமிழ் அரசியல் பிரதிநிதிகளிடம் இல்லை என்பேன்- 

மாறாக அமெரிக்க, பிரித்தானிய மற்றும் இந்திய இராஜதந்திரிகள் சொல்வதை நம்பிக் கொண்டு சிங்கள ஆட்சியாளர்களுக்குத் தங்கள் மூளையை விற்பணை செய்யும் பிரதிநிதிகளே தமிழர்கள் மத்தியில், ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு வடிவத்தில்  தோன்றுகின்றனர்.  

No comments