காற்றுப்போன சுமாவின் நிமல்கா அன்கோ!கோத்தா அரசினை ஜெனீவாவில் காப்பாற்ற பாடுபட்ட தரப்புக்கள் தற்போது காற்றுப்பிடுங்கப்பட்ட நிலையில் கைவிடப்பட்டுள்ளனர்.

ஜெனீவாவில் இலங்கையை காப்பாற்றிய சுமந்திரன்,அம்பிகா,நளினி,நிமல்கா பெர்னான்டோ தரப்பு காணாமல் போயுள்ள சிங்கள ஊடகவியலாளர் பிரகீத் காணாமல் போனமை தொடர்பில் காணாமல் போனோர் ஆணைக்குழுவில் தகவல்கள் ஏற்கனவே உள்ள நிலையில் புதிதாக விபரங்கள் கோரப்பட்டமை காணாமல் போனதை மூட மேலும் தகவல் கேட்கப்படுகிறதா? ஏன கேள்வி எழுப்ப வைத்துள்ளது.

ரணிலின் சார்பு காணாமல் போனோர் ஆணைக்குழு முன்னாள் ஆணையர் நிமல்கா பெர்னாண்டோவே இவ்வாறு புலம்பியுள்ளார்.

பிரகீத் எக்னலிகொட காணாமல் போனது குறித்து விசாரிக்க போதிய உண்மைகள் இல்லை என்று கூறி காணாமல் போனோர் அலுவலகம் அவரது மனைவிக்கு அனுப்பிய கடிதத்திற்கு பதில் அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

முன்னாள் ஆணையர் என்ற வகையில், பிரகீத்தின் காணாமல் போன புகார் தொடர்பாக மேலும் விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான அடிப்படை தகவல்கள் அவ்வலுவலகத்தில் உள்ளது என்று என்னால் கூற முடியும் எனவும் நிமல்கா தெரிவித்துள்ளார்.


No comments