மகிந்த மருத்துவரிற்கு தனியான சட்டம்!இலங்கை பிரதமரின் மருத்துவர் எலியந்த வைட் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் இறுதிநிகழ்வுகள் நேற்று பொரளை கனத்தை மயானத்தில் இடம்பெற்றவேளை குடும்பத்தவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர்  கலந்துகொண்டுள்ளனர்.

சுhதார பொதுமக்களிற்கு கொரோனா காரணமாக இறுதிநிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் அரச செல்வாக்கு உடையவர்களிற்கு சட்டம் எவ்வாறு சாதகமாக செயற்படும் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

கொரோனாவை தடுக்க பானைகளில் நீரை மந்திரித்து அமைச்சர்கள் சகிதம் விழா முன்னெடுத்ததுடன் தடுப்பூசிகளை பெறாத நிலையில் மருத்துவர் எலியந்த வைட் கொரோனாவால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments