கடலுக்கு திரும்பிய கோமராசி மீன்!யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில், நேற்று மாலை, வலையில் சிக்கிய அரியவகை கோமராசி மீன், மீண்டும் கடலில் விடப்பட்டுள்ளது.

கோமராசி அல்லது புள்ளிச்சுறா என அழைக்கப்படும் குறித்த மீனை, வலையில் இருந்து அகற்றிய மீனவர்கள், அதனை, மீண்டும் கடலுக்கு அனுப்பியுள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு, மேலும் ஒரு கோமராசி மீன்,  வலையில் அகப்பட்டதுடன், நேற்று இரண்டாவது முறையாகவும், கோமராசி மீன் பிடிபட்டுள்ளது. இந்த நிலையில், ஆழ்கடலில் வசிக்கும் இந்த மீன்கள், சில நாட்களாக கரைக்கு வந்து போவதாக, மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

No comments