முன்னணி,நாமல் அனுராதபுரத்தில்!

 


தமிழ் அரசியல் கைதிகளிற்கு அரச அமைச்சர் கொலை மிரட்டல் விடுத்தமை தொடர்பாச சர்ச்சைகளின் மத்தியில் தமிழ் அரசியல்கட்சி பிரதிநிதிகள் சிலர் இன்று அனுராதபுரம் சிறைக்கு சென்றுள்ளனர்.

எனினும் அவர்கள் நீண்ட இழுத்தடிப்புக்களிற்கு மத்தியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு அரசியல் கைதிகளை சந்தித்து திரும்பியுள்ளனர்.

இதேவேளை அமைச்சர் நாமலும் அனுராதபுரம் வந்து திரும்பியுள்ளார்.

இதனிடையே அநுராதபுரம் சிறைச்சாலையில் குடிபோதையில் சென்றதாக தெரிவிக்கப்படும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையினால் மிரட்டப்பட்ட தமிழ்க் கைதி யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த மதியரசன் சுலக்சன் என்ற 33 வயது கைதியே என தெரியவந்துள்ளது. 

இவர் கடந்த 2009ஆம் ஆண்டில்  இறுதி யுத்தத்தின் பின்னராக பயங்கரவாத விசாரணைப்பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இலங்கை படையினரை கொன்றதாக வழக்குகள் சோடிக்கப்பட்ட நிலையில் வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.

திட்டமிட்டு பத்துவருடங்களிற்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சுலக்சன் தனது விடுதலையை வலியுறுத்தி சிறையினுள் பல தடவைகள் உணவு தவிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்திருந்தார்.

இந்நிலையில் பழிவாங்கும் நோக்கில் சட்டமா அதிபர் திணைக்கள் வழக்கு விசாரணைகளை இழுத்தடித்து வருகின்றது.


No comments