வடக்கில் முன்னேற்றம்!வடக்கில் கொரோனா தொற்றாளர்கள் மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

நேற்று வியாழக்கிழமை வட மாகாணத்தில் 159 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

செப்ரெம்பர் மாதத்தின் முதல் 16 நாள்களில் வடக்கு மாகாணத்தில் 6 ஆயிரத்து 667 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 240 பேர் உயிரிழந்துள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் ஓகஸ்ட் மாதத்தில் 228 பேர்; உயிரிழந்த நிலையில் செப்ரெம்பர் மாதத்தின் முதல் 16 நாள்களில் 240 பேர் உயிரிழந்துள்ளனர்.


No comments