மதுபானச்சாலைகளிற்கு பூட்டா?திறப்பா?

 


இலங்கை மதுபானசாலைகள் மற்றும் விற்பனை நிலையங்களில் பியர் போத்தல்கள் மற்றும் கொள்கலன்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானது.

இன்று (17) முதல் பியர் போத்தல்கள் மற்றும் கொள்கலன்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்நிலையில், இது தொடர்பில் மதுவரித் திணைக்கள ஆணையாளரிடம் வினவிய போது, மதுபானசாலைகள் மற்றும் விற்பனை நிலையங்களில் பியர் போத்தல்கள் மற்றும் கொள்கலன்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படும் விடயம் உண்மைக்கு புறம்பானது என்பதுடன் அவ்வாறு எந்தவொரு அனுமதியும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

இலங்கையில்; கொரொனா தொற்றினை கட்டுப்படுத்தும் முகமாக பயணத்தடை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதோடு மதுபானசாலைகளும் மூடப்பட்டிருந்தன.

இந்நிலையில் இன்றைய தினம் அரசாங்கத்தினால் மதுபானசாலைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

இதன் காரணமாக இலங்கை முழுவதும் அனைத்து மதுபானசாலைகளின் முன்பாகவும் நீண்ட வரிசையில் மது பிரியர்கள் காத்திருந்து மதுபானத்தை கொள்வனவு செய்வதை காணக்கூடியதாகவுள்ளது. 



மதுபானசாலைகளுக்கு அண்மையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதோடு சமூக இடவெளி, பேணப்படவில்லை எனபதனையும் அவதானிக்க கூடியதாகவுள்ளது. 


No comments