அமெரிக்காவில் மகன் வீட்டில் மனைவியுடன் கோத்தா!

இலங்கை ஜனாதிபதி கோட்டாப ராஜபக்ச அமெரிக்காவுடனான உறவை புதுப்பிக்கும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட தொடங்கியுள்ளார்.

தற்போது ஐக்கிய அமெரிக்காவின் நியோர்க்கை சென்றடைந்துள்ள அவர் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேறகவுள்ளார்.

அமெரிக்காவிலுள்ள மகனது குடும்பத்தை சந்திக்க ஏதுவாக  தனது பாரியாருடன் அவர் அமெரிக்கா சென்றுள்ளார்.

இதனிடையேபொதுச் சபைக் கூட்டம் எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் கோட்டாபய ராஜபக்ஷஉ ரையாற்றுவார். அதன்பின்னர், உலக நாட்டுத் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடுவார் என அவரது ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.


No comments