பருத்தித்துறை பொலீஸ் பொறுப்பதிகாரிக்கு கொரோனா!

 
பருத்தித்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பருத்தித்துறை பொலீஸ் நிலையத்தில் இரு தினங்களுக்கு முன்னர் பொறுப்பதிகாரியுடன் சிறிது நேரம் உரையாடிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து நேற்று கொரோனா அறிகுறிகள் தென்பட்டதையடுத்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  இதில் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


No comments