மட்டக்களப்பில் ஆணின் சடலம் மீட்பு


மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் பிரிவிலுள்ள வலையிறவு வாவியில் ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வவுணதீவு காயமடு பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய யோகநாதன் ராயூ என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இன்று காலை ஒப்படைக்கபட்ட நிலையில், பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments