பயம் வேண்டாமாம்:சோத்திற்கு தட்டுப்பாடில்லை!இலங்கையில் உணவுப் பற்றாக்குறை இல்லையென அரசு மறுதலித்துள்ளது.சீனி மற்றும் அரிசி விலை இரட்டித்துள்ள நிலையில் பால்மா காணாமல் போயுள்ளது.

இதனிடையே உணவு பற்றாக்குறை காரணமாக அரசாங்கம் அவசரகால நிலையை அறிவித்ததாக உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்தியையும் அரசாங்கம் மறுத்துள்ளது.

செயற்கை உணவு பற்றாக்குறையை தோற்கடிப்பதற்காக அவசரகால விதிமுறைகள் அறிவிக்கப்பட்டதாக அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை சீனி சேமிப்பு கிடங்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 29,900 மெட்ரிக் தொன் சீனி மீட்கப்பட்டு அரச மற்றும் தனியார் வர்த்தகர்கள் கட்டுப்பாட்டு விலையில் பொதுமக்களுக்கு விற்க திட்டமிடப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையர்; மேஜர் ஜெனரல் நிவுன்ஹெல்லா தெரிவித்துள்ளார்.


No comments