கூட்டமைப்பு,முன்னணி வெளியே:வாக்கெடுப்பு இரத்து!கூட்டமைப்பின் பின்னடிப்பினால் வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் தெரிவு கோரம் இல்லாததால், திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் தெரிவு அமர்வு, இன்று முற்பகல் 10 மணிக்கு நகர சபைக்குரிய மண்டபத்தில், வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக் டிரஞ்சன் தலைமையில் நடைபெற்றது.

இன்றைய அமர்வு கடுமையான சுகாதார நடைமுறைகளுக்கு உட்பட்டு  நடத்தப்பட்டது. 

இதன் போது, சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் மூவரும் ஈபிடிபி உறுப்பினர்கள் இருவரும் என ஐவர் மட்டுமே அமர்வில் பங்கேற்றனர்.

அதனால் அமர்வு சுமார் 30 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், அமர்வு ஆரம்பிக்கப்பட்டதும் கோரம் காணாததால் திகதி குறிப்பிடப்படாமல், தவிசாளர் தெரிவு அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.

கூட்டமைப்பு மற்றும் முன்னணி உறுப்பினர்கள் பலரும் வாக்கெடுப்பிற்கு பங்கெடுக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.


No comments