கொரோனாவிற்குள்ளும் கல்லா கட்டும் அதிகாரிகள்!



கொரோனா பெருந்தொற்றின் மத்தியில் அர்ப்பணிப்பு சேவையை ஒருபுறம் அரச சேவையாளர்கள் ஆற்றிவர இன்னொருபுறம் கல்லா கட்டுவதில் இன்னொரு கும்பல் மும்முரமாக ஈடுபட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.

வடமராட்சியிலுள்ள கரவெட்டி பிரதேச செயலகத்தின் ஊழியர்களிற்கு சீருடையாக ரீசேர்ட் தைத்த விவகாரத்தில் இலட்சக்கணக்கில் சுருட்டிக்கொண்டமை அம்பலத்திற்கு வந்துள்ளது.

உள்ளுர் சந்தைகளை புறந்தள்ளி  சிங்கள தனியாரிடம் ஊழியர்களிற்கு சீருடையாக கொழும்பில் இருந்து ஆடை தருவிக்கப்பட்டதிலேயே பல்லாயிரம் பணம் சுருட்டப்பட்டுள்ளது.  

ஊழியர் நலன்புரிச்சங்கத்தின் பணத்திலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட இச்சீருடைகள் தொடர்பில் அதிகாரிகளிற்கும் தொடர்புள்ளமை தொடர்பில் ஊழியர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதனிடையே குறித்த பிரதேச ஊழியர் ஒருவர் கடமை நேரத்தில் புடவை வியாபாரத்தில் ஈடுபட்டுவருகின்றமை தொடர்பில் ஏற்கனவே மாவட்ட செயலர் முதல் பிரதேச செயலர் வரை புகார்கள் பலவும் அனுப்பட்டிருந்த போதிலும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லையென தகவல்கள் தெரிவிக்கின்றன.


No comments