பாரதிக்கு நினைவேந்தல்!
தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் க.சிவாஜிலிங்கம் கொரோனாத் தொற்றுக்கு இலக்கான நிலையில், கோப்பாய் கொரோனா வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே அவர் யாழிலுள்ள இந்திய துணைதூதரகம் முன்னெடுத்த பாரதியார் நினைவுதின நிகழ்வில் காணொலி ஊடாக பங்கெடுத்திருந்தார்.
தேசிய கவிஞர் சுப்பிரமணிய பாரதியாரின் 100-வது நினைவு தினத்தை யாழிலுள்ள இந்தியதுணைதூதரகம் அனுசரித்துள்ளது. கோவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக, யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஸ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தூதரகம் மற்றும் இந்தியா மாளிகையில் மகாகவிக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அரச அமைச்சர் மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கஜன் இராமநாதன், சுரேன் ராகவன், எம்.எ. சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் . சி.சிறீதரன், சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் எம். கே. சிவாஜிலிங்கம் மற்றும் யாழ் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற தமிழ் பிரிவு பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா, போன்றோர் காணொலி மற்றும் செவ்வி செய்திகள் மூலம் மகாகவிக்கு மரியாதை செலுத்தினர்.
Post a Comment