புலிகள் குற்றங்களை விசாரிக்க வேண்டும்:தமிழரசுக்கட்சி


 

ஐநாவில் தருஸ்மன்  வழங்கிய அறிக்கையில் சொல்லப்பட்ட இறுதிப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசாங்கம் தொடர்பிலான குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்ற கருத்தை மட்டும் ஏன்? தமிழரசுக்கட்சி தனது அறிக்கையில் உள்வாங்கி அனுப்பியது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பினார்.


யாழ் ஊடக அமையத்தில்  சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது நேற்று முன்தினம் சுமந்திரன் தெரிவித்த  ஒரு தரப்பை மட்டும்  விசாரிப்பதை ஏற்கமுடியுமா? எனத் தெரிவித்த கருத்து தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில் தருஸ்மன் குழுவினால் ஐநாவுக்கு வழங்கப்பட்ட அறிக்கையில் இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இருதரப்பு மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


அதனை நடத்துவதா? அப்போது நடத்துவது வேற தரப்புகளையும் விசாரணை செய்ய வேண்டுமா? என  ஐநா தான் முடிவெடுக்க வேண்டும்.


 இவ்வாறான நிலைமையில் ஐநா விசாரணை ஆரம்பிக்கப்பட முன்னர்  தருஸ்மன் வழங்கிய  பரந்துபட்ட அறிக்கையில் இருந்து இருண்டு வரிகளை மட்டும் தமிழரசுக்கட்சி தனது அறிக்கையில் குறிப்பிட்டமை ஏன்?


தாங்கள் அவ்வாறு அறிக்கையில் ஒன்றும் குறிப்பிடப்படவில்லை என சுமந்திரன் யாழில் ஊடக சந்திப்பில் தெரிவிக்க  கிளிநொச்சியில் தமிழரசுக் கட்சியின் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறிதரன் தமிழரசுக்கட்சி அனுப்பிய அறிக்கைக்கும் எமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கிளிநொச்சியில் ஊடக சந்திப்பை நடத்தினார்.


இங்கு வேடிக்கை என்னவென்றால் இருவரும் தமிழரசுக் கட்சியைச் சார்ந்தவர்கள் ஒருவர் அனுப்பவல்லை என்கிறார். மற்றவர் அவர்கள் அனுப்பியதற்கும் எமக்கும் எந்த தொடர்பும் இல்லை என்கிறார்.


யாழில் ஊடக சந்திப்பை நடத்திய சுமந்திரன் பல மாறுபட்ட குழப்பகரமான பதில்களை ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.


தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு இல்லை நாங்கள் ஒற்றுமையாகத் தான்  இருக்கிறோம்  சில ஊடகங்கள் மக்களுக்கு  தவறான பிரச்சாரத்தை செய்கின்றது என தெரிவித்திருந்தார்.


அவ்வாறாயின் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சிறிதரன் தமிழரசுக்கட்சி அனுப்பிய ஆவணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை எனக் கூறுவது எவ்வாறு?.


அதுமட்டுமல்லாமலாது சிறிதரன் மேலும் தெரிவிக்கும் போது  நாங்கள் 9 பேர் கையெழுத்துடன் ஆவணத்தை தயார் செய்தோம் ஆனால் சில காரணங்களால் அனுப்ப முடியவில்லை என  பகிரங்கமாகவே கூறியிருந்தார்.


இவ்வாறான நிலையில் தமிழரசுக் கட்சிக்குள்ளே இரண்டு அறிக்கைகள் தயார் செய்யப்பட்ட நிலையில் நாங்கள் ஒற்றுமையுடன் தான் இருக்கிறோம் என சுமந்திரன் கூறுவது எவ்வளவு தூரம் ஏற்புடையது என எண்ணத் தோன்றுகிறது.


ஆகவே தமிழரசுக் கட்சியை ஆய்வுக்கு அனுப்பிய கடிதத்தில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களை தீர்ப்பதற்கு முதலில் அறிக்கையை அவர்கள் பகிரங்கப்படுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments