நவம்பரில் பல்லைக்கழகங்கள் ஆரம்பம்!


இலங்கையில் கொரோனா காரணமாக மூடப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களை நவம்பரில் மீள திறக்கப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் முடிவுக்குள் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி போட அரசு ஏற்பாடு செய்துள்ளதால், நவம்பர் முதல் பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், நான்கு கட்டங்களாக பாடசாலைகளை, ஒக்டோபர் மாத இறுதிக்குள் திறக்க எதிர்பார்த்துள்ளதாக, இராஜாங்க அமைச்சர் பியால் நிசாந்த என்பவர் கூறியுள்ளார்.

இதனிடையே மாணவர்களிடையே சீன சினோபாம் ஊசிக்கு வரவேற்பில்லாத நிலையில் பைஸர் ஊசிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.


No comments